நியூயார்க்: தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்
முதற்கட்டமாக கடந்த 28-தேதி இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டன் நகரத்துக்கு சென்றார். அங்கு தொழில் தொடர்பான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, 1-ந் தேதிஅமெரிக்கா சென்றார்-ந் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அங்கு 16 நிறுவனங்களின் புரிந்துணர்வு ஸ்டாலின் சந்திப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம்மூலம், தமிழ்நாட்டில் 2,780 கோடி ரூபாய் முதலீடும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க நாட்டின் சான் யூசே நகரில் நனட ெப ற் மு த லீ ட் ட ா ள ர் க ள் கூட்டத்துக்கு முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆக்கமும் ஊக்கமும் அளிக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த கூட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் முதலீடு செய்து, வெற்றிகரமாக தொழில் நடத்தி வரும் அமெரிக்க நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் உள்ள வசதிகள் பற்றியும், தங்களின் சிறப்பான அனுபவங்கள் பற்றியும் எடுத்துரைத்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள சிறந்த உட்கட்டமைப்பு, திறன் மிக்க மனிதவளம் தடையில்லா மின்சாரம், தொழில் நடத்த உகந்த அமைதியான சூழல், விரைவான அரசு அனுமதிகள் விளக்கும் காட்சி தொகுப்பும் திரையிடப்பட்டது.