மதுரை, திருவாரூர், திருச்சியில் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

   


             சென்னை : திமுக  இளைஞர் அணிச் செய்லாளர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 7ந்தேதி மற்றும் 8ந் தேதிகளில் மதுரை திருவாரூர்   திருச்சியில் சுற்றுப் பயணம் செய்து இளைஞர் அணி நிர்வாகிகளை சந்திக்கிறார்.


           வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) காலை மணிக்கு மதுரை காள் வாசல் பைபாஸ் ரோடு சங்கம் கிராண்ட் ஓட்டலில் நெல்லை மத்திய மாவட்டத்துக்குட்பட்ட பகுதி ஒன்றிய, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்பாளர், துணை அமைப் பாளர்களுக்கான நேர்காணலை நடத்துகிறார் பின்னர் மதுரை மாநகர்  இளைஞர் அணி பகுதிஅமைப்பாளர்-துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணலை நடத்துகிறார்.


           பகல் 11.30 மணிக்கு மதுரை கிழக்கு தொகுதி நாராயணபுரத்தில் இளைஞர் அணியினர் குளத்தை தூர்வாரி கரையை மேம்படுத்தி நடைபாதை அமைத்துக்கக் கொடுத்ததை   மக்களின் பயன்பாட்டுக்கு வழங்குகிறார்.


         வருகிற 8-ந்தேதி  காலை 7 மணிக்கு திருவாரூர் சட்டமன்ற தொகுதி யில் இளைஞர் அணி சார்பில் நீர் நிலை மேம் படுத்தும் பணியில் பங்கேற்கிறார்  காலை 7.30 மணிக்கு கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் திருக்கு வளையில் உள்ள மக மககுளத்தினை இளைஞர் அணியினர் தூர்வாரும் பணியை மேற் கொண்டு சீரமைத்ததை பார்வையிட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குகிறார்.


          காலை 10 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி யினருடன் நேர்காணலை நடத்துகிறார். பின்னர் திருச்சி வடக்கு, தெற்கு மாவட்ட இளைஞர் அணி யினருடன் நேர்காணல் நடத்துகிறார்.